உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் உலக செஸ் தொடரில் சாதனை கோப்பை வென்றார் . ரூ. 1 கோடி பரிசு.
206 பேர் பங்கேற்ற உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில், நடந்தது. இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித்குஜ்ராத்தி உட்பட 24 பேர் பங்கேற்றனர். அரையிறுதிக்கு யாரும் முன்னேறவில்லை.
பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், சீனாவின் வெய் இ மோதினர். இவர்கள் மோதிய இரண்டு போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது. முடிவில் 2.5-1.5 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். தவிர இளம் வயதில் (19) உலக கோப்பை வென்ற வீரர் என சாதனை படைத்தார். இவருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது. வெய் இ,ரூ.76 லட்சம், 3வது இடம் பெற்ற எசிபென்கோ, ரூ.54 லட்சம் பரிசு பெற்றனர்.
0
Leave a Reply